Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் வாகனப் பேரணி!

In இலங்கை
Published: 06:55 GMT, Sep 13, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Ravivarman
DSC_0073

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி வவுனியாவை வந்தடைந்ததுடன், இன்று (புதன்கிழமை) வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி ஆரம்பமாகியது.

வவுனியா ஏ9 விதியில் உள்ள புதிய பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த குறித்த வாகனப்பேரணி மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்தது.

பின்னர் அங்கிருந்து வைரவபுளியங்குளம் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுரச்சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதி வழியாக அனுராதபுரம் நோக்கிச் செல்கின்றது.

தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தை நிறுத்து, இலவசக் கல்வியை சிதைக்காதே போன்ற வாசகங்களுடன் மோட்டர் சைக்கிள்கள், கார்கள், முச்சக்கர வண்டிகள் என இவ் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்றது.

இப் பேரணியில் வைத்தியர் சங்கம், மருத்துவ பீட மாணவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_0067 DSC_0065

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg