Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மன்னாரில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் மீனவர்கள் பாதிப்பு: ஆலம்

In இலங்கை
Published: 07:12 GMT, Sep 13, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Ravivarman

மன்னாரில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகள் அதிகரித்துள்ளதுடன், இவர்களுக்குச் சாதகமாகவே கடற்தொழில் திணைக்களம் செயற்படுகின்றது என வட.மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

மன்னார் மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தில் இன்று (புதன் கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடல் சூழலுக்கும், கடல் வளங்களுக்கும் அழிவை ஏற்படுத்தும் இழுவை மடி கொண்டு மேற்கொள்ளப்படும் மீன் பிடி முறமையினை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாக நாடாளுமன்றம் ஊடக சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இன்று வரை குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையினால் உள்ளூரில் உள்ள மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர்.

இருந்தும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 02 மாதங்கள் கடந்த நிலையில் எமது கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கை சற்றுக் குறைவடைந்திருக்கின்றது.

இருப்பினும், உள்ளூரில் இத்தொழில் புரிவோர் முன்பை விட பாதிக்கப்படுவதுடன் தங்களின் தொழில் நடவடிக்கைகளை கடலையண்டிய கரையோரங்களிலும் மிகவும் தீவிரமாக செய்து வருகின்றார்கள்.

எனவே அமைச்சர் நிறைவேற்றப்பட்ட இழுவை மடிச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த கடற்தொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினரைப் பணிக்க வேண்டும்” என தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)