Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

துன்பங்களை அனுபவிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்: ஐ.நா. எச்சரிக்கை

In ஐரோப்பா
Updated: 07:41 GMT, Sep 13, 2017 | Published: 07:36 GMT, Sep 13, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Elakkiya
dd6c5b56-eb79-499b-a79f-05798dec30ad

ஐரோப்பாவில் தஞ்சம்கோரும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தமது பயணத்தின்போது சித்திரவதை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பிற முறைகேடுகளுக்கு ஆளாகுவதாக ஐ.நா அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக சப் சஹாரா ஆபிரிக்காவிலிருந்து வருபவர்களே இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு முகம்கொடுப்பதாக ஐ.நா. குழந்தைகளுக்கான அமைப்பின் (UNICEF)  அதிகாரிகளும் சர்வதேச இடம்பெயர்தலுக்கான அமைப்பின் (IOM) அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் இனவெறி காரணமாக இவ்வாறு நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து ஐ.நா. குழந்தைகளுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 11 ஆயிரம்  குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உட்பட 22 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் இத்தகைய துன்பங்களை அனுபவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவுக்குள் நுழையும் நோக்கில் மத்தியதரைக்கடலை கடக்க முயன்ற 77 சதவீத குழந்தைகளும் இளைஞர்களும் துஷ்பிரயோகம் மற்றும் ஏனைய முறைகேடுகளால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களால்வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடிகளுக்கு ஐரோப்பா தொடர்ச்சியாக முகம்கொடுத்துள்ளது. ஐ.நா. புள்ளிவிபரங்களின் பிரகாரம், 2017 ஆம் அண்டின் ஆரம்பத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்தியதரைக்கடலை கடந்துள்ளனர்.

இவர்களின் பெரும்பாலானவர்கள் இத்தாலியை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)