Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் அபாயகரமானவர்கள்!

In கிாிக்கட்
Updated: 07:30 GMT, Sep 13, 2017 | Published: 07:30 GMT, Sep 13, 2017 |
0 Comments
2475
This post was written by : Anojkiyan

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகவும் அபாயகரமானவர்கள் என அவுஸ்ரேலிய அணியின் சகலதுறை வீரரான மார்கஸ் ஸ்டாய்னிஸ் தெரிவித்துள்ளார்.

இத்தொடரில் இடம்பெற்றுள்ள ஸ்டாய்னிஸ் இத்தொடர் குறித்து கூறுகையில், “இந்தியா எங்களுக்கு எதிராக 350 ஓட்டங்கள் குவிக்கும். இந்த தொடரில் நாங்கள் அதிக ஓட்டங்கள் குவிப்போம் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் துடுப்பாட்டம் மிகவும் அபாரமாக உள்ளது. இந்தியா அதிக ஓட்டங்கள் அடிக்கும். 350 ஓட்டங்கள் உறுதியாக எடுக்கும்.

இந்திய அணியில் அனைவரும் மிகவும் அபாயகரமானவர்கள். ஒவ்வொருவரும் சிறந்த வீரர்கள். தலைசிறந்த வீரர்கள்” என கூறினார்.

அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg