Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நள்ளிரவில் நடந்த கூட்டம்! – அதிரடியாக பதவிகளில் மாற்றம்

In இந்தியா
Updated: 07:37 GMT, Sep 13, 2017 | Published: 07:37 GMT, Sep 13, 2017 |
0 Comments
1628
This post was written by : Puvanes

அ.தி.மு.கவின் நிலையச் செயலாளர் பதவியில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்து அ.தி.மு.வின் பொதுக்குழு கூட்டத்தினை நேற்றைய தினம் கூட்டினர்.

இதன்போது, சசிகலாவின் நியமனத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மட்டுமே நிரந்தரப் பொதுச்செயலாளர் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பொதுச் செயலரின் அதிகாரங்களை பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அளிப்பதோடு, கட்சியில் இனி பொதுச் செயலாளர் பதவி இல்லை என்ற, சசிகலா தரப்பிற்கு எதிராக 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு தினகரன் தலைமையில் ஒன்று கூடிய கூட்டத்தில், நிலையச் செயலாளர் பதவியில் இருந்து பழனிசாமி நீக்கப்பட்டு, அதற்கு பாப்பிரெட்டிபட்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து திண்டுக்கல் சீனிவாசனை நீக்கி, தனது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரெங்கசாமியை தினகரன் நியமித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு தினகரன் கருத்து வெளியிடும் போது, பொதுச்செயலாளர் சசிகலாவால் மட்டுமே பொதுக்கூட்டத்தினை கூட்ட முடியும் எனவும், இந்த ஆட்சியினை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அண்மையில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரின் கூட்டத்தில் தினகரனை துணைப்பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவரின் ஆணைகள் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உட்பூசல் காரணமாக இருதரப்பினராலும் மாறி மாறி பதவிகளில் இருந்து நீக்குவதாக தீர்மானங்கள் எடுப்பட்டு வருவதால், அ.தி.மு.க குழப்பத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg