Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு வெலிக்கடையில் ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Published: 07:43 GMT, Sep 13, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Ravivarman

‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’ என்ற தொனிப்பொருளில் வீதி நாடகமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளன.

சர்வதேச சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு, இந்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, அரசாங்கம் சிறைக்கைதிகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும் என்றும், வெலிக்கடைப் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, சிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான இயக்கம் உள்ளிட்ட மேலும் சில சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைவர்களும், மனிதஉரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்ததுடன்,ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன், அங்கு சென்றதுடன், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் கலந்துரையாடி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

zx

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg