Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இர்மா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் கட்டியெழுப்பப்படும்: மக்ரோங் உறுதி

In ஐரோப்பா
Published: 08:01 GMT, Sep 13, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Elakkiya

‘இர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டு தீவுகள் விரைவில் மீளக் கட்டியெழுப்பப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் உறுதியளித்துள்ளார்.

கரீபியன் பிராந்தியங்களை தாக்கிய இர்மா புயல் காரணமாக  43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  இர்மா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட செயற்திறன் மிக்க தீவுகளில் ஒன்றான செய்ன் மார்டினுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்றிருந்த மக்ரோங், மேற்படி உறுதியளித்துள்ளார். இதன்போது குறித்த பகுதியின் சேதத்தை மதிப்பிட்டு விரைவான மீட்பை எதிர்பார்ப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளுக்காக 50 மில்லியன் யூரோக்களை விரைவாக வழங்கவுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர், இராணுவத்தினர் உட்பட 2000 பேர் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இர்மா புயலினால் கரீபியன் தீவுகளில் முக்கியமாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. சுமார் பத்தாயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

அமெரிக்க வேர்ஜின் தீவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)