Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் கோஹ்லி டோனிக்கு இவ்வளவு மவுசா?

In கிாிக்கட்
Updated: 09:04 GMT, Sep 13, 2017 | Published: 09:04 GMT, Sep 13, 2017 |
0 Comments
2124
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் மீதுள்ள அச்சத்தை போக்க சர்வதேச கிரிக்கெட் சபை நடத்தப்படும் உலக பதினொருவர் அணி மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ரி-ருவென்ரி தொடரில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோஹ்லியையும் டோனியையும் சேர்த்திருக்கலாம் என பாகிஸ்தான் இரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தீவிரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம் காட்டிவரும் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை கொண்டு வரும் நோக்குடன் தென்னாபிரிக்க அணியின் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான 7 நாட்டு வீரர்களை உள்ளடக்கிய உலக பதினொருவர் அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரில் விளையாடுகின்றது.

ஆனால் பாகிஸ்தானின் பரம எதிரி நாடான இந்தியாவில் ஒரு வீரர் கூட இதில் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கோஹ்லியையும் டோனியையும் இத்தொடரில் இணைத்திருக்கலாம் என அந்நாட்டு இரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உலக பதினொருவர் அணிக்கெதிரான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg