Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீர்சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!

In இலங்கை
Updated: 08:25 GMT, Sep 13, 2017 | Published: 08:25 GMT, Sep 13, 2017 |
0 Comments
1261
This post was written by : Ravivarman

வவுனியா,பாவற்குளம் படிவம் – 05 கிராம மக்களின் பாவனைக்காக நீர்சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வு நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்கதலைவர் தலைமையில் இடம்பெற்றதுடன்,நிகழ்வில் பிரதம விருந்தினராக வட.மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், கௌரவ விருந்தினர்களாக சீ..வினோத் (பிரதேச சபை வெங்கலசெட்டிக்குளம்), சமிந்த எதிரிசூரிய (பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பூவரசங்குளம் ), எஸ்.சுப்ரமணியம் கிராம சேவையாளர், மாகாணசபை உறுப்பினரின் இணைப்பாளர்களான வே.குகதாசன், யோகன் மற்றும் கிராமமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணசபை உறுப்பினருக்கான குறித்தொதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதியில் இருந்து ஜி.ரி.லிங்நாதனால் மேற்படி உபகரணத் தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_0219 IMG_0204 IMG_0186

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg