Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இர்மா புயல் தாக்கம்- ஒட்டுமொத்த பிரான்ஸின் ஒத்துழைப்பும் அவசியம்

In ஐரோப்பா
Published: 09:37 GMT, Sep 13, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Elakkiya

இர்மா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கரீபியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்த பிரான்ஸின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

இர்மா புயலால் பாதிக்கப்பட்டுள்ள செய்ன் மார்ட்டின் பிரதேசத்திற்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த மக்ரோங் அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நெதர்லாந்துடன் பகிரப்பட்டுள்ள மார்ட்டின் தீவில் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்பாளர்களின் நியாயமான கோபத்தை ஏற்றுக் கொண்டுள்ள மக்ரோங், இழப்பீட்டு நிதிகளுடன் குறித்த பகுதிகளை மீட்டெடுப்பதற்கு பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் உதவுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “எமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நான் இங்கு வந்துள்ளேன். இந்த மக்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துகின்றோம்”  என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே 3000 பேர் தீவிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் இனியும்  வெளியேற விரும்புபவர்கள் அவசர உதவியை பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg