Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரெக்சிற் – எதிர்காலம் குறித்து இளம் சந்ததியினர் அச்சம்

In
Published: 08:13 GMT, Sep 13, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Suganthini
uk

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ள நிலையில், தங்களது எதிர்காலம் தொடர்பில் பிரித்தானியாவிலுள்ள இளம் சந்ததியினர்  அச்சமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகளவானோர் அச்சமடைந்துள்ளனர் என்று ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

18 வயது முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே, எதிர்காலம் தொடர்பில் இளம் சந்ததியினர் அச்சமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதன் மூலம் தாம் பாரிய சுமைக்கு உள்ளாகுவதுடன், பல தடைகளையும் சந்திக்க நேரிடும் என்று இளம் சந்ததியினர் உணர்கின்றனர்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை தொடர்பில் பலர் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 69 வீதமானவர்கள் ஆதரவாகவும் அரைவாசிப் பேர் வாக்களிப்பில் ஈடுபடவில்லை எனவும்
இதற்கிடையில், நவீனத்துமான பிரித்தானியாவில் மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக பாடசாலைகள் பாரிய பங்கு வகித்துள்ளன என அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான வாக்கெடுப்பு கடந்த ஜுலை மாதம் நடத்தப்பட்ட நிலையில், இதற்கு ஆதரவாக பிரித்தானியாவைச் சேர்ந்த பெருமளவான மக்கள் வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், எதிர்வரும் 2019ஆம் ஆண்டும் மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)