Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் அடை மழை – மின்சாரமின்றி மக்கள் தவிப்பு

In
Updated: 08:38 GMT, Sep 13, 2017 | Published: 08:36 GMT, Sep 13, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Suganthini
rain

பிரித்தானியாவின் வேல்ஸில் பலத்த காற்றுடன் அடை மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சுமார் 60 ஆயிரம் பேர் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேல்ஸில் ஏலியன் எனும் புயல் நேற்று மாலை வீசியுள்ளது. இந்நிலையில், மணிக்கு 75 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசியுள்ளது.

இந்தப் பலத்த காற்று சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. பாரிய மரங்கள் வீதிகளில் முறிந்துள்ளன.

வேல்ஸில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் சிரமத்தை எதிர்நோக்கினர் என மின்விநியோக நிலையம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலைத் திணைக்களம், தங்களது பயணங்களின்போது கவனமாக நடந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg