Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கையில் வலுவான நிலையில் சீனா! – அமெரிக்காவில் ராகுல் காந்தி

In இந்தியா
Updated: 08:59 GMT, Sep 13, 2017 | Published: 08:56 GMT, Sep 13, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : Puvanes
ragul_ganthi001

உலக நாடுகளில் பிரசன்னமாகியுள்ள சீனா, இலங்கையில் வலுவாக பிரசன்னமாகியுள்ளது என இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விஜயத்தினை மேற்கொண்டுள்ள அவர், கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றின் போதே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் வாரிசு அரசியல் காணப்படுவது உண்மையே எனவும், இந்த விடயத்தில் தலைவர்களில் வாரிசுகள் என்று பார்க்காமல் உண்மையிலேயே அவர்களுக்கு திறமை இருக்கின்றதா எனப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மோடி மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, இது போன்ற விடயம் நாட்டுக்கு மிக ஆபத்தானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணமதிப்பிழப்பு காரணமாக இந்தியா கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது, பல லட்சம் சிறு தொழில்கள் முற்றாக அழிந்து விட்டன எனவும், வேலைவாய்ப்பு உட்பட பல விடயங்களில் நாட்டுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது எனவும் ராகுல் காந்தி மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)