Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் ரியான்!

In இலங்கை
Updated: 09:01 GMT, Sep 13, 2017 | Published: 09:01 GMT, Sep 13, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Ryan-415x260

அரச சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த மருத்துவ பீட மாணவர் குழுவின் ஏற்பாட்டாளர் ரியான் ஜயலத்தை, தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கு விசாரணை, இன்றைய தினம் (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சைட்டம் எதிர்ப்பு பேரணியின் போது, சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், கடந்த ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதி ரியான் ஜயலத் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg