Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கெய்லின் வருகையால் உச்சகட்ட மகிழ்ச்சியில் இரசிகர்கள்

In கிாிக்கட்
Published: 09:37 GMT, Sep 13, 2017 |
0 Comments
1731
icon_com
This post was written by : Anojkiyan
chr

அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின் மூலம் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடவுள்ள அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தியுள்ளார்.

பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நீண்ட நாட்களுக்கு பிறகு கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“நான் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதில் இரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட விரும்புகிறேன். கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தீர்ந்து வருகின்றன. இந்த நல்லுறவை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என கூறினார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும், இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் நான்கிலும் வெற்றி பெற்றால்தான் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கிறிஸ் கெயில் அணியில் இருப்பது, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு நேரடியாக தகுதிபெற உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg