Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிகப்பெரிய போருக்கு அனைவருக்கும் ஓர் அழைப்பு!

In இந்தியா
Published: 09:13 GMT, Sep 13, 2017 |
0 Comments
1279
icon_com
This post was written by : Puvanes
stalin001

தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக மிகப்பெரிய போர் தொடங்கவுள்ளது அதற்காக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று நீட் தேர்வுக்கு எதிராக தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் போராட்டம் நீட் எதிர்ப்புக்காக மட்டுமல்ல மக்கள் பிரச்சினைக்கான போராட்டம் எனக் குறிப்பிட்ட அவர், அனிதாவின் தற்கொலை ஓர் கொலை அதற்கான நீதி வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது அ.தி.மு.கவின் ஆட்சியல்ல பா.ஜ.கவின் ஆட்சியே நடந்து வருகின்றது எனக்குறிப்பிட்ட ஸ்டாலின் இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg