Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இர்மா’ புயல் தாக்கம் – கரீபியனில் நீண்டகால உதவி தேவை

In
Published: 09:23 GMT, Sep 13, 2017 |
0 Comments
1130
icon_com
This post was written by : Suganthini
irma11

‘இர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கரீபியன் பிராந்தியத்தில் நிவாரண உதவிக்கான நீண்டகால ஆதரவை வழங்குமாறு பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘இர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரண உதவி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், குறுகிய காலத்துக்கான நிவாரண உதவி அந்த மக்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் கூறியுள்ளார்.

அத்திலாந்திக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல், முதலில் கரீபியன் தீவைத் தாக்கியது. இதன்போது, 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள இப்பிராந்தியத்தில் மீட்புப் பணி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக படையினரையும் பிரித்தானியா அனுப்பி வைத்துள்ளது. சுமார் 500 படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ‘இர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிவாரண உதவிக்காக மேலதிக நிதி உதவியை அளிப்பதற்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே முன்வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், அழிவை ஏற்படுத்தியுள்ள இப்பிராந்தியத்தில் உதவித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு வருமாறு வர்த்தகர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg