Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்ணாக மாறினார் விஜய் சேதுபதி

In சினிமா
Updated: 09:29 GMT, Sep 13, 2017 | Published: 09:29 GMT, Sep 13, 2017 |
0 Comments
1565
This post was written by : Vithushagan

தனது அசாத்திய நடிப்பால் ரசிகா்களின் பேராதரவை பெற்றுவரும் நடிகா் விஜய் சேதுபதி தனது அடுத்தக்கட்ட முயற்சியாக பெண் வேடத்தில் நடித்து வருகிறாா்.

ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமார்ராஜா இயக்கும் “அநீதி கதைகள்“ படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்படம்  ஒன்று வெளியாகியுள்ளது, அதில் விஜய்சேதுபதி பெண் வேடமிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி  ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதியுடன் மலையாள நடிகர் ஃபகத் பாசில், சமந்தா மற்றும் காயத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பல்வேறு வேடங்களிலும், கஷ்டமான கதாபாத்திரத்தையும் மிகவும் சிறப்பாக நடித்து இரசிகா்களை பெரியஅளவில் கவா்ந்துவரும் விஜய் சேதுபதி முதல்முறையாக பெண் வேடத்தில் நடிக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg