Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு யாருக்கு? முடிவு இன்று

In விளையாட்டு
Updated: 10:13 GMT, Sep 13, 2017 | Published: 10:13 GMT, Sep 13, 2017 |
0 Comments
1225
This post was written by : Anojkiyan

எதிர்வரும் 2024ஆம் மற்றும் 2028ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை பெறும் இருநகரங்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாகவுள்ளது.

பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

2024ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்த ஹம்பர்க் (ஜேர்மனி), ரோம் (இத்தாலி), பரிஸ் (பிரான்ஸ்), புடாபெஸ்ட் (ஹங்கேரி) உள்ளிட்ட நகரங்கள் விருப்பம் தெரிவித்தன. ஆனால், நிதி பிரச்னை காரணமாக பாரிசைத் தவிர மற்ற நகரங்கள் ஒலிம்பிக் நடத்தும் போட்டியிலிருந்து விலகின. இதனால், 2024ஆம் ஆண்டு பாரிஸில் ஒலிம்பிக் அரங்கேறுவது உறுதியானது.

இதேபோல, 2028ஆம் ஆண்டில் போட்டியை நடத்த அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மட்டுமே விருப்பம் தெரிவித்தது.
ஆகையால் ஒலிம்பிக் போட்டி 2024ஆம் ஆண்டு நடத்துவதற்கு பாரிஸூம், 2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் தெரிவுசெய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg