Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் ஆயுத வர்த்தகக் கண்காட்சி

In
Published: 09:52 GMT, Sep 13, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Suganthini

மிகப் பிரமாண்டமான ஆயுத வர்த்தகக் கண்காட்சியொன்று, பிரித்தானியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தலைநகரான லண்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில், ஆயிரத்துக்கும் அதிகளவான ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பலர் தங்களது ஆயுதத் தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கண்காட்சியானது, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பிரித்தானியாவில் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த முறை நடைபெறும் கண்காட்சியில் சர்வதேசப் பிரதிநிதிகள் 250 பேர் உட்பட 34 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, சவூதி அரேபியாவுக்கு பல மில்லியன் பெறுமதியான ஆயுத ஏற்றுமதி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கமானது, பிரசாரக் குழுக்களால் பாரிய கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

சவூதி அரேபியாவுக்கான ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்பட வேண்டும் என்று, பிரசாரர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கடந்த ஜுலையில் லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. ஏனெனில், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறி, அந்த ஆயுதங்கள் யேமனில் பயன்படுத்தப்பட்டன எனவும் பிரசாரர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg