Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் மலையாள திரையுலகில் பிரியாமணி!

In சினிமா
Published: 10:13 GMT, Sep 13, 2017 |
0 Comments
1184
This post was written by : Vithushagan
25-1443179148-priyamani-4

திருமணத்துக்கு பின்னர் நடிகை பிரியாமணி தற்போது மலையாள படமொன்றில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழ்பட உலகில் தமிழ் பேசத் தெரிந்த சில நடிகைகளில் நடிகை பிரியாமணியும் ஒருவர். பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை பிரியாமணிக்கு தமிழில் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் தனது பலநாள் காதலரான தொழிலதிபர் முஸ்தபா ராஜூவை நடிகை பிரியாமணி, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது திருமணமாகி இரண்டு வாரங்களே ஆனநிலையில் பிரியாமணி, மீண்டும் நடிக்க வந்து விட்டார்.

மலையாள இயக்குனர் கிரிஷ்கைமால் இயக்கும் ‘ஆஷிக் வண்ண திவாசம்’ என்ற படத்தில் தான் அவர் நடித்து வருகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg