Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் வெடிக்கும் சர்ச்சைகள்! – சசிகலா தொடர்பில் வெளிவந்த புதுத் தகவல்கள்

In இந்தியா
Published: 10:14 GMT, Sep 13, 2017 |
0 Comments
3531
icon_com
This post was written by : Puvanes
sasikala001

சொத்துக் குவிப்பு வழக்கில், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறையில் விஷேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக மீண்டும் சர்ச்சைகள் வெடித்துள்ளன.

சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரூபா ஏற்கனவே முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றும் வரும் நிலையில், தகவல் அறியும் சட்டம் மூலமாக மேலும் சில தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில், சிறையில் உள்ள கைதி ஒருவரை, ஒரு நாளில் 4 அல்லது 6 உறவினர்கள் மட்டுமே பார்வையிட முடியும். எனினும் யூலை 11ஆம் திகதி சசிகலாவை 7 பேர் சந்தித்ததாகவும் அதில், 4பேர் உறவினர்கள் அல்லாதோர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், 15 நாட்களுக்கு ஒரு தடவை மாத்திரமே சிறைக்கைதியை சந்திக்க முடியும் என்ற நிலையில் சசிகலா, வாரத்திற்கு ஒரு முறை பார்வையாளர்களை சந்தித்துள்ளார்.

சிறையில் சட்ட விதிகளுக்கு அமைய கைதி ஒருவர் தனக்கு அவசியமாக பொருட்களை சிறைக்குள்ளேயே பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும்.

எனினும் இதுநாள் வரையிலும் சசிகலா சிறையில் எந்த பொருளினையும் பணம் கொடுத்து வாங்கவில்லை என்ற தகவலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள குறித்த தகவல்கள் காரணமாக சசிகலாவின் சிறைச் சலுகைகள் குறித்த விவகாரம் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg