Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைதானத்தில் புகுந்து வீரரை தாக்க முயன்ற மர்மநபர்: அதிர்ந்த கால்பந்து அரங்கம்

In உதைப்பந்தாட்டம்
Published: 10:29 GMT, Sep 13, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Anojkiyan
Celtic-Fan

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின், பரிஸ் செயின்ட் ஜேர்மைன் (பி.எஸ்.ஜி)– செல்டிக் அணிகளுக்கிடையிலான போட்டியின் இடைநடுவில் இரசிகர் ஒருவர் பரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணியின் வீரர் கெலியன் மெம்பேவை தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற இப்போட்டியின் முதற்பாதியில் இரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி, மைதானத்துக்குள் ஓடியதுடன், அங்கிருந்த கெலியன் மெம்பேவை தடியொன்றினால் தாக்க முயன்றார்.

இதன்போது உடனடியாக மைதானத்திற்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த நபரை உடனடியாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவர் ஏன் இவ்வாறு நடந்துக்கொண்டார் என பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இப்போட்டியில், பரிஸ் செயின்ட் ஜேர்மைன் 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg