Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இர்மா புயலில் சிக்கி தவிக்கும் கனேடியர்களுக்கு உடனடி தீர்வு: ஃபிறீலான்ட் உறுதி

In கனடா
Updated: 11:16 GMT, Sep 13, 2017 | Published: 11:16 GMT, Sep 13, 2017 |
0 Comments
1200
This post was written by : Anojkiyan

இர்மா புயலில் சிக்கி தவிக்கும் கனேடியர்கள் அனைவரையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் உறுதியளித்துள்ளார்.

ரொறன்ரோவில் இருந்து இணைய காணொளி மாநாடு ஊடாக விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“சிக்குண்டுள்ள கனேடியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவற்கு, அரசாங்கம் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். அதனை நிறைவேற்றும் வரையில் தனிப்பட்ட ரீதியில் தானும் ஓயப்போவதில்லை.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்குண்டுள்ள அனைத்து கனேடியர்களையும் மீண்டும் தாயகம் அழைத்து வருவதற்கு அரசாங்கம் மிக மிக கடினமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த வார இறுதியில் சுமார் 390 பேர் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர், எதிர்வரும் நாட்களில் வர்த்தக விமானங்கள் மூலம் மேலும் பலர் அழைத்துவரப்படவுள்ளனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg