Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இர்மா புயலால் அமெரிக்காவில் 22 பேர் உயிரிழப்பு

In
Updated: 10:58 GMT, Sep 13, 2017 | Published: 10:57 GMT, Sep 13, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Elakkiya
46dd831a-929d-4798-8879-b1f1fdb2ec94

கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா புயல் காரணமாக அமெரிக்காவில் மாத்திரம் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் குறைந்தது 12 பேர் புளோரிடாவை சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை பல மில்லியன் கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி தகவல்களை புளோரிடாவின் அவசரநிலை முகாமைத்துவ பேச்சாளர் அல்பேட்டோ மொஸ்கோசோ உறுதிப்படுத்தியுள்ளார்.

அதகாரபூர்வ தகவல்களின் பிரகாரம் புளோரிடா மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவான மக்கள் தொகையான 9.5 மில்லியன் மக்களுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சீர் செய்வதற்கு பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் முடிந்த அளவில் விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவை தாக்கிய இர்மா அதன்பின்னர் ஜோர்ஜியா, அலபாமா, தென் கரோலினா, மற்றும் வட கரோலினா ஆகிய இடங்களையும் பலமாக தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg