Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச உளநல தினம் அனுஷ்டிப்பு!

In இலங்கை
Updated: 11:55 GMT, Sep 13, 2017 | Published: 11:06 GMT, Sep 13, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Ravivarman
21733158_1689164414441551_2005818898_n

‘மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்வாக இருப்போம்’ என்ற மகுட வாசகத்தின் கீழ் சர்வதேச உளநல தினம் வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா விபுலாந்தாக கல்லூரியில் ஒரு மாத காலத்திற்கு இத்தினத்தை முன்னிட்டு உளவள நடவடிக்கைகள் இடம்பெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணியளவில் அதிபர் சுப்பையா அமிர்தலிங்கம் தலைமையில் உளநல செயற்பாட்டு நிகழ்வுகள் கல்லூரியில் இடம்பெற்றன.

‘மனம் விட்டுப் பேசுவோம் மகிழ்வாக இருப்போம்’ என்ற தலைப்பில் வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் சிறப்புரை நிகழ்த்தினார். இதன்போது அவர் உரையாற்றுகையில்,

‘அதிபர் – ஆசிரியர் – மாணவர்கள் மனம் விட்டுப் பேசுவதால் மன இறுக்கமின்றி பேசும் வாய்ப்பு கிடைப்பதுடன் நல்ல உறவுகளைப் பேணி மாணவர்களுக்கு வழி காட்டியாக அமைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களை விட தமக்கு வழிகாட்டியாக அமைந்த ஆசிரியர்களே மாணவர்கள் மனதில் பெரிதும் இடம்பிடித்துள்ளனர் என்பதால் ஆசிரிய – மாணவ இடைவெளிகள் குறைக்கப்பட்டு மாணவர்கள் மனம் விட்டு பேசும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார்.

இதேவேளை, பாடசாலை அதிபர் தனது உரையில், இத்தினத்தில் பாடசாலை உளநலக்குழுவினர் எடுத்த முயற்சியைப் பாராட்டிப்பேசியதுடன், பொறுப்பாசிரியர் திருமதி யசோதரன் அவர்களுக்கும், சிறப்புரை ஆற்றிய மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தருக்கும் நன்றிகளைத் தெரிவித்து பாடசாலை மாணவர்கள் தமது பிரச்சனைகளை மனம் விட்டு பேசுவதுடன் தம்மிடையே பாராட்டுதல்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனத்தெரிவித்தார்.

21733103_1689163034441689_506370290_n 21729404_1689163674441625_1736328960_n 21729131_1689163467774979_2132698477_n

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg