Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

‘முதலில் என் தந்தையை கொன்றனர்’- ஒஸ்கார் நாயகியின் மறுபக்கம்!

In கனடா
Published: 11:02 GMT, Sep 13, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Varshini

ஒஸ்கார் விருதுவென்ற நாயகி ஏஞ்சலினா ஜூலி, ரொறொன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் தனது குழந்தைகள் சகிதம் கலந்து சிறப்பித்துள்ளார்.

தனது அசாத்திய நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ள ஏஞ்சலினா ஜூலி, திரைப்பட கதை வசனம் எழுதுதல் மற்றும் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறார்.

அந்தவகையில் அவரது தயாரிப்பிலும், இணை எழுத்துருவாக்கத்திலும் உருவாகியுள்ள ‘First They Killed My Father’ (முதலில் என் தந்தையை கொன்றனர்) திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அவர் இவ்விழாவில் கலந்துகொண்டார். அங்கு, ஜூலியானா மற்றும் அவரது குழந்தைகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.

கடந்த 1970களில் இடம்பெற்ற கொலம்பிய போரில் நிகழ்ந்த இனப் படுகொலையின் போது, நெல் வயல்களில் வேலைசெய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்ட ஒரு சிறுமி, சிறுவர் போராளியாக ஆயுதம் ஏந்திய சம்பவத்தை கருவாக கொண்டு இக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கொலம்பிய வரலாற்றால் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டதாக குறிப்பிடும் ஏஞ்சலினா, அந்நாடு தொடர்பாக மேலும் ஆராய்வதற்கான ஆர்வத்தையும் தூண்டியுள்ளதென குறிப்பிட்டுள்ளார். கொலம்பிய யுத்தத்தின் போது கலைஞர்களே ராணுவத்தால் அதிகம் இலக்கு வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள ஏஞ்சலினா, சகல கலைஞர்களையும் ஒன்றிணைத்து அது தொடர்பான திரைப்படத்தை தயாரித்த அனுபவம் உண்மையில் திகில் அனுபவத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்திருந்ததென குறிப்பிட்டுள்ளார்.

ஆறு குழந்தைகளுக்;கு தாயான ஏஞ்சலினா ஜூலியின் ஒரு மகனான மடொக்ஸ், கொலம்பியாவிலேயே பிறந்துள்ளார். அத்தோடு, இத் திரைப்படம் கடந்த வருடம் கொலம்பியாவில் திரையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)