Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எலுமிச்சம் சாதம்!

In
Updated: 11:39 GMT, Sep 13, 2017 | Published: 11:37 GMT, Sep 13, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Vithushagan
201709131300593886_1_vegetablelemonrice._L_styvpf

எலுமிச்சை சாதம் செய்யும் போது அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று காய்கறி சேர்த்து எலுமிச்சை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி 2 – கப்,
எலுமிச்சம் பழம் – 2,
கரட் – 1,
பீன்ஸ் – 10,
பட்டாணி – அரை கப்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 3,
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடுகு – அரை தேக்கரண்டி
உளுந்து – 1 தேக்கரண்டி
கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி
முந்திரி – 10,
எண்ணெய் – 3 டேபிள் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு.

செய்முறை : 

அரிசியை சிறிதளவு உப்பு சேர்த்து உதிராக வேக வைத்து கொள்ளவும், மரக்கறி, இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும் அதன் பின்னர் எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, முந்திரி ஆகியவற்றைத் தாளித்த பின்னர் காய்கறிகள், இஞ்சி, மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, சிறிதளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.

காய்கறிகள் வேக சிறிதளவு தண்ணீரை தெளித்து கொள்ளவும், காய்கறிகள் வெந்ததும், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து இறக்குங்கள், இந்தக் கலவையை சாதத்தில் கொட்டி, உப்பு சேர்த்துக் கிளறுங்கள், சூப்பரான காய்கறி எலுமிச்சம் சாதம் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)