Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புயல் தாக்கிய இடங்களுக்கு விமானங்களை அனுப்ப முடியாதுள்ளது: போக்குவரத்து அமைச்சர் மார்க்

In கனடா
Updated: 11:27 GMT, Sep 13, 2017 | Published: 11:27 GMT, Sep 13, 2017 |
0 Comments
1213
This post was written by : Anojkiyan

இர்மா புயல் தாக்கிய இடங்களில் உள்ள கனேடியர்களை மீட்க, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அரசாங்கத்தினால் எந்தவித விமானங்களையும் அனுப்ப முடியாதிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.

பெருமளவு கனேடியர்கள் தம்மை மீட்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தாமதம் காணப்பட்டமைக்கான காரணம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் இருந்தே விமானங்கள் தயாராக இருந்த போதிலும், அவை சென்று இறங்குவதற்கான விமான நிலையங்கள் இல்லாதிருந்ததாகவும், தற்போது முடிந்தவரை விரைவாக அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.

இர்மா புயல் தாக்கிய இடங்களில் உள்ள 390 பேர் கடந்த வார இறுதியில் கனடா வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg