Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவிற்கும் – ஜகத் ஜயசூரியவிற்கும் என்ன ஒற்றுமை?

In இலங்கை
Published: 11:30 GMT, Sep 13, 2017 |
0 Comments
2046
icon_com
This post was written by : Sujitharan

வடகொரியா குறித்த குற்றச்சாட்டும், முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டும், ஒரே மாதிரியானவை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகின்றார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா விஞ்ஞாபனத்தையும் மீறி இலங்கை அரசாங்கம் வடகொரியவிடமிருந்து இரும்பு மற்றும் வாகனங்களைக் கொள்வணவு செய்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அரசாங்கம் அதற்கு மாற்று கருத்துக்கள் எதனையும் வெளியிடாமைக் குறித்து, இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதா என்று தனக்கு தெரியாது என்றும், ஊடகங்களிலேயே அவ்வாறான குற்றச்சாட்டுக்களை அவதானித்ததாகவும் கூறினார்.

இந்த குற்றச்சாட்டும், ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைப் போன்றதே என்றும் அவை இரண்டும் ஒன்றுதான் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg