Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூரியனில் இதுவரை காணாத பாரிய வெடிப்பு! – அச்சத்தில் விஞ்ஞானிகள்

In அறிவியல்
Updated: 12:06 GMT, Sep 13, 2017 | Published: 11:26 GMT, Sep 13, 2017 |
0 Comments
1310
icon_com
This post was written by : Puvanes
sun001

மிகப்பெரிய அளவில் சூரியனில் வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, பாரிய அளவிலான கதிர்வீச்சு நடைபெற்றுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 ஆண்டுகளில் சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சூரிய வெடிப்பு இது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்த சூரிய வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சில் இருந்து, பூமியில் உள்ள தற்பாதுகாப்பு அமைப்புகள் காரணமாகவும், சூரியனுக்கும், பூமிக்கிரகத்திற்கும் உள்ள தூரம் காரணமாகவும் பூமிக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாரிய அளவில் சூரியனில் ஏற்படும் வெடிப்பு, 100 கோடி ஹைட்ரஜன் குண்டுகளினால் ஏற்படும் தாக்கத்தினை விடவும் அதிகமானது.

விநாடிக்கு 2000 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் கதிர்வீச்சு இதனால் வெளிப்படுத்தப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள சூரிய வெடிப்பினால் பூமிக்கு ஆபத்து ஏற்படாத போதும், விண்வெளியிலும், செயற்கைக் கோள்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கலாம் என அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக சூரியனில் வெடிப்புச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருவதாகவும் விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg