Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரிபீயன் தீவுகளுக்கு விரைந்துள்ள ‘டார்ட்’ சிறப்பு குழு

In கனடா
Published: 11:50 GMT, Sep 13, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Anojkiyan
dart

இர்மா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ‘டார்ட்’ எனப்படும் சிறப்பு குழு கரிபீயன் தீவுகளுக்கு விரைந்துள்ளது.

இதன்படி இந்தக் குழுவினர் முதற்கட்டமாக பிரதான கரீபியன் தீவுகளில் ஒன்றான அன்ரிகுவாவுக்கு பயணித்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார்.

அங்கு செலும் குழு, புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்வாறான தேவைகள் காணப்படுகின்றன, எவ்வாறான மனிதாபிமான உதவிகளை உடனடியாக வழங்கலாம் என்ற ஆய்வுகளை விரைவாக மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து கனடாவின் இராணுவத்தினர், பொதுமக்கள், வெளியுறவுப் பணியக அதிகாரிகள் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவினரை அரசாங்கம் உதவிப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg