Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதே முக்கியம்: லக்ஷ்மனின் கருத்துக்கு கிளார்க் பதிலடி

In கிாிக்கட்
Published: 12:10 GMT, Sep 13, 2017 |
0 Comments
1778
icon_com
This post was written by : Anojkiyan
lar

தற்போதைய கட்டத்தில் அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை விட இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியே சிறந்த அணித்தலைவர் என இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வி.வி.எஸ்.லக்ஷமண் கூறிய கருத்துக்கு, அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து கிளார்க் கூறுகையில், “கோஹ்லி மற்றும் ஸ்மித் இருவரில் யார் அதிக ஓட்டங்கள் குவிப்பார்கள் என்பது ஒரு பிரச்சினையே அல்ல. இறுதியில் யார் அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய அணித்தலைவராக இருக்கிறார் என்பதே முக்கியமாகும்” என கூறினார்.

அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்ட ரி-ருவென்ரி தொடரும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg