Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புற்றுநோயைத் தடுக்கும் உணவுகள்!

In
Updated: 12:57 GMT, Sep 13, 2017 | Published: 12:57 GMT, Sep 13, 2017 |
0 Comments
1377
This post was written by : Vithushagan

மரக்கறிகளில் நார்ச்சத்து, விட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன.

பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம்.

இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு தேவையான விட்டமின் ஏ சத்தினை அளிக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பீட்டா கரோடினானது புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இது கரட், இனிப்பு உருளைகிழங்கு போன்ற மரக்கறிகளில் அடங்கியுள்ளது.

நெல்லிக்காய், எலுமிச்சை ஆகியவற்றில் அதிக அளவு விட்டமின் சி இருப்பதால் இவற்றை சாப்பிடுவதாலும் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம். மிளகு, முட்டைகோஸ், தக்காளி, கீரைகள் உள்ளிட்ட பயிறு வகைகளிலும் பீட்ருட், உருளைகிழங்கு ஆகியவற்றிலும் அதிகளவு இரும்பு சத்து உள்ளது.

இவற்றால் உடலின் ரத்தம் தூய்மையாவதுடன் உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கிறது. மிக குறைவான இரும்பு சத்து இருப்பின் அனீமியா எனப்படும் இரத்த சோகை நோய் ஏற்படும்.

எனவே மரக்கறி வகைகளை எமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எமக்கு ஏற்படும் ஆபத்தான நோய்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg