Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வீரர்களை பலிக்கடாவாக்க தயாரில்லை!

In கிாிக்கட்
Updated: 12:28 GMT, Sep 13, 2017 | Published: 12:28 GMT, Sep 13, 2017 |
0 Comments
2673
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரின் போது தங்களது வீரர்களை பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை என இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது டுபாயிலேயே நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் செல்வது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை. ஏற்கனவே அந்த நாட்டில் பாதுகாப்பு தொடர்பில் கசப்பான அனுபவங்களை எமது வீரர்கள் பெற்றுள்ளனர். எனவே பாதுகாப்பு தொடர்பான நூறுவீத உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே நாங்கள் பாகிஸ்தான் போகலாம்.

எமது வீரர்களை பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. ஆனால் பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவை நாங்கள் பலப்படுத்தவேண்டும். அந்த நாடு எமக்கு அவசரத்துக்கு உதவுகின்றது. தற்போது கூட உதவி வருகின்றது.  அதேபோல் ரி-ருவென்ரி தொடர் குறித்தும் நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. நூறுவீதம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் பரிசீலிக்கலாம். கிரிக்கெட் தெரிவுக்குழு இராஜினாமா செய்தபோதும் இராஜினாமா செய்த குழுவை 25 பேர் கொண்ட குழுவை தெரிவு செய்து தருமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். அதற்கேற்ப தெரிவு நடைபெற்றது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg