Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூமியைத் தாண்டி உயிரினங்கள்! – புதிய தேடலில் விஞ்ஞானிகள்

In அறிவியல்
Published: 12:25 GMT, Sep 13, 2017 |
0 Comments
1424
This post was written by : Puvanes
antartika001

பூமியைத் தவிர விண்வெளியில் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்பது தொடர்பான ஆய்வுகள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்த நிலையில் பூமியிலும் உயிரினங்கள் வாழத்தகுதியற்ற இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அவ்வாறான இடங்களில் உயிரினங்கள் வாழ ஏதுவான சூழல் உள்ளதா? என்ற ஆய்வுகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது தொடர்பில் பனியினால் மூடப்பட்டுள்ள அந்தார்ட்டிக்காவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தார்ட்டிக்கா பகுதியில் செயற்படும் நிலையில் உள்ள எரிமலைப்பகுதிகளில் இது குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பூமியின் ஆரம்பகாலத்தில் அந்தார்ட்டிக்கா பகுதியில் உயிரினங்கள் வாழ்ந்ததாகவும், பூமியில் ஏற்பட்ட அசாதாரணமான குளிர்ச்சி காரணமாகவே அந்தாட்டியா உயிர்வாழத் தகுதி அற்றதாக மாறியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறான இடங்களில் மீண்டும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழும் சாத்தியக் கூறு தொடர்பில் கண்டுபிடிக்கப்படுமானால் விண்வெளி ஆய்வுகளிலும் திருப்புமுனை ஏற்படும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg