Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிரள வைக்கும் தொழில் நுட்பம் இது அடுத்த தலைமுறையினருக்கானது!

In அறிவியல்
Published: 12:48 GMT, Sep 13, 2017 |
0 Comments
1321
icon_com
This post was written by : Puvanes
apple001

அப்பிள் நிறுவனமானது தனது அதிநவீன தொழில் நுட்ப அம்சங்களைக் கொண்ட ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட் தொலைபேசியினை வெளியிட்டுள்ளது.

குறித்த ஸ்மார்ட்போன் முக அங்கீகரிப்பு பாதுகாப்பு அம்சம் கொண்டவகையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, ஓ.எல்,இ.டி தொழில்நுட்ப விஷேட திரையினையும் கொண்டுள்ளது.

5.8 அங்குல பெரிய திரையும், அனிமேட் ஆகக் கூடிய இமோஜிக்கள் மற்றும் வயர் தொடர்பு அற்ற நிலையில் இயங்கும் சார்ஜர் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அப்பிள் தொலைபேசிகளில் முதன்முறையாக ஹோம் பட்டன் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது ஐபோன் எக்ஸ் தொலைபேசி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிதுல்லிய முறையில் புகைப்படங்களை எடுக்கக் கூடிய வகையில் 12 மெகாபிக்சல் கொண்ட தரம்மிக்க கேமராக்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அடுத்த தலைமுறையினருக்கான தொலைபேசி என அப்பிள் நிறுவனம் குறிப்பிட்டுள்ள குறித்த ஐபோன் இப்போதைய தொழில் நுட்ப உலகில் புதுப் புரட்சி மிக்க பல்வேறு சிறப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg