Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கப்பூரில் முதல் பெண் ஜனாதிபதி

In உலகம்
Updated: 12:51 GMT, Sep 13, 2017 | Published: 12:51 GMT, Sep 13, 2017 |
0 Comments
1292
This post was written by : Suganthini

சிங்கப்பூரில் முதல் பெண் ஜனாதிபதியாக ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) வாக்கெடுப்பு எதுவுமின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளர்.

சிங்கப்பூரில் முன்னாள் சபாநாயகராகவும் பதவி வகித்திருந்த இவர், சிங்கப்பூரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமைக்கான அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மக்களுக்காக ஆற்றிய தனது உரையில், ‘எந்தவொரு தேர்தலும் நடத்தப்படாமல் நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், உங்களுக்கு சேவை செய்வதற்கான எனது உறுதிப்பாடு ஒரே மாதிரியாகவே இருக்கும்.

மேலும், பெண்கள் அனைவரும் தைரியம் மற்றும் மன உறுதிப்பாட்டுடன் கடுமையாக உழைக்கும்போதே, உயர் நிலைமையை அடையலாம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg