Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் முன்னெடுப்பு!

In இலங்கை
Published: 13:32 GMT, Sep 13, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Ravivarman
0011

வவுனியா தெற்கு மற்றும் செட்டிக்குளம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் சிறுநீரக நோயினால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த பிரதேசங்களுக்கே இவ்வாறு குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தளஆய்வு அறிக்கையினை தயாரிப்பதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபைக்கும் சீனாவின் தேசிய முழுமையான தாவர ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இது தொடர்பில் சமர்ப்பித்த ஆவணத்தை அமைச்சரவை கவனத்திற்கு எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg