Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிரியர் ஆலோசகர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு முரணானது: ஆசிரியர் சங்கம்

In இலங்கை
Published: 14:19 GMT, Sep 13, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Ravivarman
lett

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நிலவும் ஆசிரியர் ஆலோசகர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதன் பின்னர் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு முரணாக நேர்முகப் பரீட்சை நடைபெற்றிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்தின்படி பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதுடன் பட்டப் பின்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆசிரியர் சேவை -1 அல்லது ஆசிரியர் சேவை 2-1 ஆகியவை தகைமையாகக் கொள்ளப்படுவதோடு, உயர்ந்தபட்ச வயதெல்லை 50 ஆக இருத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திலெடுக்காமலேயே வலயக் கல்விப் பணிப்பாளரின் விண்ணப்பம் கோரல், மற்றும் நேர்முகப் பரீட்சை என்பன இடம்பெற்றுள்ளமை தெரியவருகின்றது.

மேலும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு முரணாக 12 அதிபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதையும், வலயத்தில் பல்வேறான பதவிகளுக்கு பொருத்தமற்ற உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மேலும் ஆசிரியர் ஆலோசகர்களை இணைத்துக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட சட்டவிதிகளுக்கு முரணான செயற்பாட்டையும் இலங்கை ஆசிரியர் சங்கம் கவனத்திற்கொண்டு மேல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றது” என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg