Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மஸ்கெலியாவில் கத்தியைக்காட்டி மாணவிகளை அச்சுறுத்திய நபர்!

In இலங்கை
Published: 14:26 GMT, Sep 13, 2017 |
0 Comments
1271
icon_com
This post was written by : Ravivarman
DSC02369

மஸ்கெலியாவில் மர்மநபர்கள் இருவர், கத்தியைக் காட்டி மிரட்டியதால் மயக்கமுற்ற மாணவிகள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், இன்று (புதன்கிழமை) காலை பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத மர்ம நபர்களே அவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் எட்டு மாணவிகளும், மூன்று மாணவர்களும் மொத்தமாக பதினொரு பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் 5-10 வரையான வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் என தெரியவந்துள்ளது.

கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்த இருவரே, இவ்வாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதாக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC02370 DSC02367 DSC02361

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)