Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காபூலில் தற்கொலைத் தாக்குதல்

In
Updated: 15:02 GMT, Sep 13, 2017 | Published: 14:55 GMT, Sep 13, 2017 |
0 Comments
1055
icon_com
This post was written by : elayathambi
afghanistan_2c680144-9881-11e7-9cb6-5fa30af43469

ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள ஹாசி கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை உள்ளூர் நேரம் 3.45 இற்கு,  தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மைதானத்திற்கு வெளியே நடத்தப்பட்ட இத் தாக்குதலில் இருவர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டுக்கும் அதிகம் என மேலும் சில ஊடகங்கள் ஊர்ஜிதமற்ற வகையில் தெரிவித்துள்ளன.

காபூலின் குறித்த சர்வதேச கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் உள்ள பாதுகாப்புக் கடவையில் தற்கொலையாளி தன்னை வெடிக்க வைத்ததாக காவல் துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானத்தில் போட்டி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் இத் தாகுதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்கும் நோக்குடன் உள்ளே செல்ல முனைந்த இளைஞர் ஒருவரை காவல் படையினர் சோதனைக்காக தடுத்த போதே தற்கொலையாளி தன்னை வெடிக்க வைத்துள்ளார்.

பாதுகாப்புத் தரப்பினர் குறித்த கொலையாளியை தடுக்காது விட்டிருந்தால், மிகப்பெரும் உயிர் அனர்த்தம் ஒன்று நிகழ்த்திருக்கலாம் என அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)