Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா பொதுச் சபை அமர்வை தவிர்க்கிறார் ஆங் சாங் சூகி

In உலகம்
Updated: 16:12 GMT, Sep 13, 2017 | Published: 16:09 GMT, Sep 13, 2017 |
0 Comments
1289
This post was written by : elayathambi

சர்வதேசத்தின் பலத்த விமர்சனத்திற்கு இலக்காகி வரும் மியன்மார் தலைவர் ஆங் சாங் சூகி  ஐ. நா பொதுச் சபை அமர்விற்கான தனது வருகையை திட்டமிட்டுத் தவிர்த்திருக்கிறார். மியன்மாரின் ரொகிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பொன்று இடம்பெற்று வருவதாக ஐ.நா குற்றம் சுமத்தியிருக்கும் நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

நியூயோர்க்கில் வரும் 20 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் பொதுச் சபை அமர்விற்கான விஜயத்தை, சூகி தவிர்த்திருப்பதாக, அவரின்  தேசிய ஜனநாயக லீக் கட்சியின் பேச்சாளர்  நேற்று தெரிவித்துள்ளார். ஏன் அவர் செல்லாதிருக்கிறார் என்ற காரணம் வெளியிடப்படவில்லை.

மியன்மாரில் கடந்த மாதம் 25 ஆம் திகதியின் பின்னர் எழுந்த மிக மோசமான இராணுவ நடவடிக்கையால், 25,370,000 ரொகிங்கியா முஸ்லிம்கள் வங்களாதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg