Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:27 GMT, Sep 13, 2017 | Published: 16:27 GMT, Sep 13, 2017 |
0 Comments
1238
This post was written by : Sivaguru Siva

இர்மா புயலால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மூன்று நாட்களாக நிலவிய மின்தடைகாரணமாக  புளோரிடா மருத்துவமனையில் ஐவர் பலியாகியுள்ளனர். மேற்படி மருத்துவமனையின் காற்றுபதனிடல் கருவி (எயார்- கொண்டிசன்)  இயங்காதமையே இந்த மரணங்களுக்குக் காரணமென தெரியவருகிறது.

இர்மா புயலால் அமெரிக்காவில் இன்னமும் சுமார் ஒரு கோடி மக்களுக்கு மின்வினியோகம் இல்லாத நிலையில் இந்த உயிரிழப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இர்மா புயலால் மிககடுமையாகப்பாதிக்கபட்ட  கரிபிய பிராந்திய மக்கள் உணவுக்காக வீதிகளில் அலையும்அவலம் உருவாகியுள்ளது

5760

ரொகிஞ்சா நெருக்கடி காரணமாக இந்த முநை இடம்பெறும் ஐ.நா பொதுச்சபை அமர்வை மியன்மாரின் நடைமுறைத்தலைவர் ஆங்சாங் சூச்சி தவிர்க்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ரொகிஞ்சா பிரச்சனையை ஐ.நாபாதுகாப்பு சபை இன்று விவாதிக்கும் நிலையில் இந்த செய்திகள் வெளிவந்துள்ளன.

ராக்கைன் மாகாணத்தின் தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு தனது ஐ.நா பயணத்தை சூச்சி மீளெடுத்ததாக மியன்மார் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் ரொகிஞ்சா மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் காரணமாக கடந்த மாத இறுதியிலிருந்து சுமார் மூன்று லட்சத்து எழுபதினாயிரம் ரோஹிஞ்சா ஏதிலிகள் பங்களாதேசில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது

_97789608_picture (1)

அமெரிக்க உள்நாட்டுப்போரில் அடிமைமுறையை ஆதரித்த தென்மாநிலங்களின் தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அகற்றப்பட்ட நகர்வுகள் சர்ச்சைக்கு உள்ளாக்கபட்டுவருகின்றன.

இந்தநிலையில் வேர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சனின் சிலை ஆர்ப்பாட்டக்காரர்களால் கறுத்தத் துணியொன்றால் மூடிக்கட்டப்பட்டுள்ளது.

தோமஸ் ஜெபர்சன் ஒரு இனவாதியென ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

_97788603_b

தமிழகத்தில் சேலம்மாவட்டத்தில் வாழும் பெண் ஒருவருக்கு தமிழக அரசின் பொதுவிநியோகத்துறையால் வழங்கப்பட்ட நுண்ணறி பயன்பாட்டு அட்டையில் ( ஸ்மார்ட் கார்ட்) மேற்படி பெண்ணான சரோஜாவின் நிழற்படத்திற்குப் பதிலாக நடிகை காஜல் அகர்வாலின் நிழற்படம் இடம்பெற்றுள்ளது.

தற்போது சமூகவலைத்தளத்துக்கு சென்றுள்ள இந்த விடயம் தற்பொது கேலி கிண்டலுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து உடனடியாக சரோஜாவின் குடும்ப அட்டையைத் திரும்பப் பெற்ற அதிகாரிகள் அவரது படத்துடனான புதிய அட்டையை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

This herd of hungry goats may look like silly billies - but there's a reason why they've scaled this tree.

ஆடுகள் தரையில் மேயுமா? மரத்தில் மேயுமா? இதென்ன கேள்வியென இந்த நிழற்படத்தைப் பார்வையிட முன்னர் மட்டும் தான் நீங்கள் கேட்கமுடியும்.

ஆனால் மொரோக்கோ நாட்டில் இவ்வாறு மரத்தில் மேயும் ஆடுகளும் உள்ளன.  இந்த மரத்தில் இருக்கும் பழங்களை சாப்பிட விரும்பும் இந்த ஆடுகளுக்கு உச்சியில் கூட ஏறத்தயங்குவதில்லை.

அட.. தரையில் மேய்ப்பர்கள். மரத்தில் ஆடுகள்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg