Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஜோர்ஜ் கற்கும் பாடசாலையில் நுழைந்த பெண்ணொருவர் கைது

In
Updated: 16:38 GMT, Sep 13, 2017 | Published: 16:35 GMT, Sep 13, 2017 |
0 Comments
1252
This post was written by : elayathambi

இளவரசர் ஜோர்ஜ் கல்வி கற்கும் தோமஸ் பற்றர்சி பாடசாலையின் உள் நுழைந்த 40 வயதுடைய பெண் ஒருவர் இன்று மாலை கைதாகி இருக்கிறார். பிரித்தானிய முடியாட்சியின் மூன்றாம் வாரிசான இளவரசர் ஜோர்ஜ் இப்பாடசாலையில் கடந்த வியாழக்கிழமை இணைத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

கைதான பெண் தென் இலண்டன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து பாடசாலையின் பாதுகாப்புக் குறித்து பாடசாலை நிர்வாகத்தினருடன் பேசி வருவதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

தகவல் அறிந்திருக்கும் கென்சிங்டன் அரண்மனை இது குறித்து கருத்துக்கள் எதனையும் ஊடகத்தினருக்கு வெளியிட விரும்பவில்லை. நான்கு வயதாகும் இளவரசருக்கான பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என ஊடகங்கள் வலியுறுத்தி உள்ளன.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg