Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தலவாக்கலையில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

In இலங்கை
Published: 16:49 GMT, Sep 13, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Vithushagan

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் -நுவரெலியா பிரதான வீதியில் பாதசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர் மீது வான் ரக வாகனம்   மோதியதில் அவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை தமிழ் மகா விதியாலயத்திற்கருகிலே இன்று (புதன்கிழமை) இரவு 6.30 மணியளவில்  விபத்து சம்பவித்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வான்  பொலிஸாரினால் நிறுத்த முற்பட்ட போதும் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் லிந்துலை கூம்மூட் பகுதியைச் சேர்ந்த சந்தன பிலிப் என இனங்காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேக நபரை கைது செய்வதற்காக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09423 DSC09437

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)