Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அர்ஜூன் அலோசியஸை கட்டாயப்படுத்த முடியாது: ஜனாதிபதி ஆணைக்குழு

In இலங்கை
Published: 02:34 GMT, Sep 14, 2017 |
0 Comments
1227
icon_com
This post was written by : Elakkiya

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸை சாட்சியம் அளிக்க  கட்டாயப்படுத்த முடியாது என பிணைமுறி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அர்ஜூன் அலோசியஸை சாட்சியம் வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இல்லை என அலோசியஸின் வழக்கறிஞர் கடந்த திங்கட்கிழமை அடிப்படை ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில் இது குறித்து நேற்றைய தினம் தீர்ப்பளிக்கும் போதே ஜனாதிபதி ஆணைக்குழு மேற்படி தெரிவித்துள்ளது.

இதன்போது, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் சொகுசு வீட்டுக்கு செலுத்தப்பட்ட குத்தகை, அர்ஜூன மகேந்திரனுடனான தொடர்பு, இரகசிய தொலைபேசி கலந்துரையாடல் உள்ளிட்ட 15 விவகாரங்களுக்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இதனடிப்படையில் மேற்படி விவகாரங்களில் சாட்சியம் அளிக்க அர்ஜூன் அலோசியஸ் மறுத்தாலோ அல்லது விருப்பமின்மையை வெளிப்படுத்தினாலோ ஆதாரங்களை கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பிரகாரம் நேற்று (புதன்கிழமை) அர்ஜூன் அலோசியஸ் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg