Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆதார் அட்டைக்கான அங்கீகாரம் விரைவில்: நிதி அமைச்சர் தெரிவிப்பு

In இந்தியா
Published: 03:20 GMT, Sep 14, 2017 |
0 Comments
1122
icon_com
This post was written by : Kemasiya
FM Arun Jailtey at the 'HT Leadership Summit 2016

ஆதார் அட்டை திட்டத்துக்கு அரசமைப்பின் சட்ட அங்கீகாரம் கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புது டெல்லியில் நேற்று ஐ.நா. சார்பில் நடைபெற்ற அனைவருக்கும் நிதிச் சேவை தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற அருண் ஜெட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசு குடிமக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நலன்திட்ட உதவிகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை கிட்டத்தட்ட வந்துவிட்டது. இருப்பினும் ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அடிப்படை உரிமையே என்று உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில்  ஆதார் அட்டை தொடர்பான அனைத்து வழக்குகளும் நவம்பர் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஆதார் அட்டைக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மேலும் ஆதாருக்காக பெறப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், தனிநபர் உரிமையைப் பாதுகாக்கவும் சட்டத்தின் மூலம் இரும்புச் சுவரை மத்திய அரசு அமைத்துள்ளது. எனவே, அரசமைப்புச் சட்டப்படி ஆதாருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் 9 நபர்கள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு அண்மையில், நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட உரிமை குறித்து தீர்ப்பளித்தது. அவர்கள் சட்டத்தின்படி இந்த விடயத்தை அணுகியுள்ளனர். அதே நேரத்தில், தேசப் பாதுகாப்பு, குற்றங்களைக் கண்டறிவது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவற்றில் தனியுரிமை பெரிய பிரச்னையாக இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg