Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகை கௌதமி நீட் பரீட்சை தொடர்பில் மத்திய அமைச்சரிடம் ஆலோசனை

In இந்தியா
Updated: 03:54 GMT, Sep 14, 2017 | Published: 03:52 GMT, Sep 14, 2017 |
0 Comments
1242
This post was written by : Kemasiya

நீட் பரீட்சை தொடர்பில் நடிகை கௌதமி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை டெல்லியில் நேற்று(புதன்கிழமை)   சந்தித்து பேசியுள்ளார். அத்துடன் மூன்று வருடத்திற்கு நீட் பரீட்சையை ஒத்தி வைப்பது தொடர்பில் மனு ஒன்றினையும் கையளித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கௌதமி,

சமீப காலமாக தமிழகத்தில் நீட் பரீட்சை  காரணமாக  பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தாக வேண்டும். தமிழக மாணவர்ளுக்கு நீட் பரீட்சை குறித்த புரிதல் ஏற்கனவே இருந்தாலும் அவர்களை அதற்கு இன்னும் தயார்படுத்த வேண்டும். அதற்கு ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு பலதரப்பட்ட முன்னேற்றமான  செயற்பாடுகளின் பின்னரே நீட் பரீட்சை தமிழகத்திற்கு சாத்தியம். எதையும் தயார் படுத்தாமல் ஒரு முடிவை எடுப்பதென்பது சாத்தியமற்றது. எனவே நீட் பரீட்சை தொடர்பான முற்கூட்டிய செயற்பாடுகளை  செய்ய வேண்டும் . அதன் பின்னரே அவற்றை அமுல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே அமைச்சரிடம் நீட் பரீட்சையை 3வருட காலத்திற்கு ஒத்தி வைப்பது தொடர்பான மனு ஒன்றினை கொடுத்துள்ளளேன். அதற்கு அவர் பரீட்சை பற்றி தெளிவாக விளக்கினார். அதனை உடனடியாக நீக்குவது சாத்தியமில்லை என்றாலும் இப்பொழுது இருந்து முயற்சித்தால் அடுத்த வருடத்தில் ஒத்திவைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த ஆண்டளவில் நீட் பரீட்சை ஒத்திவைக்கப்பட வேண்டும், அது தான் எல்லோருடைய விரும்பமும், அனிதா தற்கொலை பற்றி பேசமுடியவில்லை, பரிதாபமான விடயம் அதற்கு வருந்துகின்றேன்.விரைவில் நீட் பரீட்சையைக்கு முடிவுகாண்போம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg