Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்லாமிய பாடசாலையில் தீ விபத்து: 25 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 03:44 GMT, Sep 14, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Elakkiya

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இஸ்லாமிய விடுதிப் பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜாலன் தாடக் கேராமத் பகுதியில் தாருல் குர்ரான் இட்டிபாகியா என்ற பெயரில் செயற்பட்டுவரும் இஸ்லாமிய மத வழிபாட்டு விடுதிப் பாடசாலையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5.40 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

மூன்று மாடி கட்டடமான இந்த பாடசாலையின் மேல்தளத்திலேயே முதலில் தீ ஏற்பட்டதாக மலேசிய தீ மற்றும் மீட்புத் துறை அறிக்கையின் பிரகாரம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் விடுதி அதிகாரிகள் இருவர் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன் 7 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg